திருமணத்திற்கு வந்த நபரை கட்டிவைத்து அடித்த மக்கள் (வீடியோ)

56பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவின் தர்குல்வா கிராமத்தில் திருமணவிழாவில் கலந்துகொண்ட ஒருவர் இரவு நேரத்தில் மது போதையில் வழிதவறிச்சென்று ஒரு வீட்டின் கதவை தட்டியுள்ளார். இதையடுத்து அவரைத் திருடன் என்று தவறாகப் புரிந்து கொண்ட உள்ளூர்வாசிகள், "திருடன், திருடன்" என்று கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி