சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடைவிடாத கனமழை நீடிக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் கரையை நோக்கி நகரும் வேகம் மெதுவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் நகரும் வேகம், மணிக்கு 13 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ ஆக குறைந்தது.