கேரளா: கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சினேகா அஞ்சலி என்ற இளம்பெண் 2 நாட்களுக்கு முன் வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பததால், அவரது குடும்பத்தினர் போலீஸிடம் புகாரளித்தனர். இந்நிலையில், முத்தாண்டி ஆற்றங்கரையில் அப்பெண்ணின் காலணி, குடை இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்
து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தேடிய போது, 500 மீட்டர் தொலைவில் சினேகா அஞ்சலியின் உடல் மீட்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.