கோவை 100 அடி சாலையில் நேற்று (அக். 1) இரவு வேகமாக சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். காரில் இருந்த மூன்று பேரிடம் இருந்த செல்போன்களை போலீசார் பறித்ததாக கூறப்படுகிறது. மூன்று பேரில் ஒரு இளைஞர் மது போதையில் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திமுக எம்.பி. கனிமொழியின் பி.ஏ.வாக உள்ளவரின் தம்பி என தன்னை கூறிக்கொண்டு காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார்.