சென்னை அசோக் பில்லர் அருகே தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர், 100 அடி சாலை வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இன்று (அக்., 02) காலை நடந்த இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷின் கை எலும்பு முறிந்தது. உடனே அவர் கே.கே.நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.