அண்ணாமலையைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
*காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் புகார்*


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் நகரச் செயலாளர் விஜயன் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரை தரக்குறைவாக விமர்சனம் செய்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு அண்ணாமலையைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

இதனையடுத்து, காரியாபட்டி காவல் நிலையத்தில் கழகப் பொதுச் செயலாளரை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி