என் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் பேட்டியளித்துள்ளார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனை கடுமையாக தாக்கி பேசிய பின் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியின்போது திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நான் பொறுப்பாக செயல்படவில்லை என என்மீது குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு. என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.