மருதூர் அய்யனார் கோவிலில் வைகாசி சின்ன களரி திருவிழா

64பார்த்தது
*விருதுநகர் பாவாலி கிராமத்தில் அமைந்துள்ள மருதூர் அய்யனார் கோவிலில் வைகாசி சின்ன களரி திருவிழா. *


விருதுநகர் பாவாலி ரோட்டில் அமைந்துள்ள மருதூர் அய்யனார் கோவிலில் வைகாசி மாதம் சின்ன களரி திருவிழா 5 வருடத்திற்கு ஒரு முறை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு ஸ்ரீமான் வேலாயுதத் தேவர் வகையறா சார்பாக மருதூர் அய்யனார் கோவில் சின்ன களரி திருவிழாவை முன்னிட்டு
பக்தர்கள் ஒருவாரம் விரதமிருந்து சாமி வேடம் அணிந்து விருதுநகரில் உள்ள மேல தெருவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக பாவாலி ரோட்டில் அமைந்துள்ள மருதூர் அய்யனார் கோவிலில் பக்தர்கள் ஒத்த பானையில் பொங்கல் வைத்து பின்பு ஆடுகளை பலியிட்டு நள்ளிரவு பூஜை நடைபெறும்.

இந்த நள்ளிரவு பூஜை முடிந்தவுடன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் மாமிச விருந்து அளிக்கப்பட்டு சிறப்பாக சின்ன களரி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி