டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 200 கிலோ கொக்கைன் போதைப் பொருளை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் இன்று (அக்.10) பறிமுதல் செய்துள்ளனர். டெல்லியில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.