விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியில் செயல்படு வரும் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடை பெறுவதாக வன்னியம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் படி சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையிலான போலீஸார் சோதனை செய்தனர்.
சோதனையில் 55 வயதுடைய வைத்திலிங்காபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் பையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.