ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற சாதாரன தீர்மானக் கூட்டம் நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் 47 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. உடன் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி அவர்கள் நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் அவர்கள் மற்றும் நகராட்சி மேலாளர் பாபு அவர்கள், நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் ஆறுமுகம் அவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் சந்திரா அவர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளுக்கான தேவைகளை நகர்மன்றத் தலைவர் அவர்களிடம் முன்வைத்தனர். அதற்க்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களின் முன்னிலையில் வார்டுகளில் நடைபெற்று முடிந்த வேலைகள் பற்றியும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகள் பற்றியும், நகர்மன்ற உறுப்பினர்கள் தேவைகளை விரைந்து செயல்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.