நாளை (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இறைச்சிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விஷேச தினங்களில் ஆடு, கோழி, சேவல் வாங்க சந்தைகளுக்கு அதிக அளவில் மக்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இன்று 10 கிலோ எடை உள்ள ஆடு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையும், ஒன்றரை கிலோ கோழி ரூ.350 முதல் ரூ.400 வரையும் விற்பனையானது. அதேபோல், நாளை மீன், பிராய்லர் கோழி விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.