பிரபல Ola-வும் இப்போது இந்த 10 நிமிட டெலிவரியில் இணைந்துள்ளது. ஓலா நிறுவனம் 10 நிமிடத்தில் மளிகை பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. இதன் டெலிவரி சேவையானது இப்போது இந்தியா முழுவதும் இயங்குகிறது. அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை உங்கள் வீட்டு வாசலில் வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதாக உறுதியளித்துள்ளது. மேலும், ஆர்டர்களில் 30% வரை தள்ளுபடியைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.