ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் அத்தி கோயில் காலனியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் சேவுகமூர்த்தி (21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளையை விமர்சனம் செய்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 16ம் தேதி காளியப்பன் வீட்டிற்கு சென்று சேவுகமூர்த்தி தகராறில் ஈடுபட்டார். அப்போது சேவகமூர்த்தி கட்டையால் தாக்கியதில் காயமடைந்த காளிமுத்துவின் மகள் வைரமுனி(21) உயிரிழந்தார். இதுகுறித்து கூமாபட்டி வழக்கு பதிவு செய்து, சேவுகமூர்த்தியை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சேவகமூர்த்திக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.