விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் என்பவர் 2023 இல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன், தங்கப்பாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்,
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்று கிராம சபை கூட்டத்தில் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பனை நெஞ்சில் காலால் மிதித்து உதைத்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் தங்கபாண்டியனுக்கு சொந்தமான திருமண மண்டபம், கடைகள், வீடுகள், சொந்தமான விவசாய நிலங்கள், தோப்புகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் முன்னிலையில் வருவாய், பொதுப்பணி, மின்வாரிய துறையினர் அளவீடு பணிகள் செய்து சொத்து மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.
தங்கப்பாண்டியனின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் தொடங்கப்படும் என அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தனர்.