கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.