ம.பி.: சிங்ரௌலி மாவட்டம் அமிலியா காட்டி அருகே அதானி குழும லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். நிலக்கரி எடுத்துச் செல்லும் கனரக லாரி எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், பைக்கில் பயணித்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்தனர்.