மகா கும்பமேளாவில் டீ விற்பனை செய்பவர் சுபம் பிரஜாபத் என்ற இளைஞர். இவர் மகா கும்பமேளாவில் சிறிய டீ கடை ஒன்று அமைத்தார். இவர் டீ விற்பனையின் மூலம் மட்டுமே ரூ.5,000 தினமும் வருமானம் ஈட்டி வருகிறார். இதுகுறித்து அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஒரு நாளைக்கு ரூ.7000 வரை வருமானம் வந்தால் அதில் லாபம் மட்டுமே ரூ.5000 வரை இருக்கும் என கூறியுள்ளார். 1 நாளுக்கு = 5000 என்றால், 30 நாட்களில் 1,50,000 வரை சம்பாதிக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.