பிரபல நடிகை இலியானா 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இலியானா வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் டோலனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோவா பீனிக்ஸ் என்ற ஆண்குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து, தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக இலியானா புத்தாண்டு அன்று அறிவித்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பக் காலத்தின் போது நள்ளிரவில் ஏற்படும் அதீத பசி குறித்த போட்டோவை பகிர்ந்து தான் 2-வது முறையாக தாயாக உள்ளதை உறுதி செய்துள்ளார்.