ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. JioHotstar ஓடிடியை தற்போது எந்தவித கட்டணமும் இல்லாமல் பார்க்க முடியும். அதாவது பயனர்கள் சந்தா இல்லாமல் அனைத்தையும் கண்டு ரசிக்கலாம். ஆனால் திரைப்படங்கள் அல்லது வெப் தொடர்கள் இடையில் விளம்பரங்கள் வரும். உங்களுக்கு இடையில் விளம்பரங்கள் வர வேண்டாம் என்றாலும், உயர் தரத்தில் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றாலும் மூன்று மாதங்களுக்கு ரூ.149 கட்டணம் செலுத்த வேண்டும்.