வாய்ப்புண் குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். குளிர்ச்சியான தேங்காய் பாலை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து கீழே துப்ப வேண்டும். இது போன்று நாளொன்றுக்கு 2-3 முறை செய்து வரும் போது வாய்ப்புண் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.