அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானம் இன்று (பிப்.,15) இரவு 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 67 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 33 பேர் அரியானா, 8 பேர் குஜராத், 3 பேர் உ.பி.,யைச் சேர்ந்தவர்கள் ஆவர்.