தமிழ்நாட்டில் நடிகைகள் குறித்து சில யூடியூபர்ஸ் அவதூறாக பேசி வருவதாக நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "தங்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பதை மறந்துவிட்டு பெண்கள் குறித்து யூடியூபர்ஸ் பேசுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பெண்களை அழைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச வேண்டும்" என கூறியுள்ளார்.