திருப்பத்தூர் மாவட்டம் ஏரியூரில் நடைபெற்ற தனியார் பள்ளி விழாவில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் பங்கேற்றார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், “உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என கேட்டார். அதற்கு, மாணவர்கள் விஜய் என கூறினர். பிடித்த நடிகை நயன்தாரா என்றனர். இதனைக் கேட்ட உடனே, “விஜய்யா உங்களுக்கு ஃபீஸ் கட்டுகிறார்?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, “உங்களுக்கு எப்பொழுதும் ‘அப்பா தான் ஹீரோ’” என மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.