ஆதாரமற்ற பல சினிமா தகவல்களை பரப்புவதற்காக தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வரும் யூடியூப் சேனல் வலைப்பேச்சு. பிஸ்மி , அந்தணன் , மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் இந்த சேனலின் வீடியோவில் பேசி வருகிறார்கள். இந்நிலையில் ப்ரேமலு பட நடிகை மமிதா பைஜூ-வை பற்றி செய்தி ஒன்றை வெளியிட்ட வீடியோவின் கீழ் AI மூலம் உருவாக்கப்பட்ட படு கவர்ச்சியான புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் வலைப்பேச்சு சேனலை கடுமையாக சாடியுள்ளார்.