அரசுப் பள்ளிகளில் ஒரு மாதத்தில் 1.17 லட்ச மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "2025-26-ம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.