வக்பு மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவெடுத்துள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே மத்திய பாஜக அரசு, மக்களவையில் நாளை (ஏப்.2) வக்பு மசோதாவை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.