மகாளய அமாவாசை தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள் கூட்டம்..

59பார்த்தது
சதுரகிரி மலையில் மகாளய அமாவாசை தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருகோவிலாகும். சதுரகிரியில்பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் 4 நாட்கள் அனுமதி வழங்கி வருகின்றனர். இன்று, புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் இந்த புண்ணிய நாளில் சிவன் கோவில்களில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம், திதி கொடுப்பது மற்றும் விளக்கேற்றி வணங்குவது உள்ளிட்டவை பக்தர்கள் ஈடுபடுவார்கள். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமியை, மகாளய அமாவாசை நாளில் தரிசனம் செய்து வணங்குவது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல இடத்திலிருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன. சதுரகிரியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசை தரிசனத்திற்காக சதுரகிரி வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல ஊரிலிருந்து, அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அடிவாரப் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி