சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மக்களுக்கு விரோதமாக புதியதாக கொண்டுவந்துள்ள பிஎன்எஸ்எஸ், பிஎன்ஏஸ், பிஎஸ்ஏ ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும்

ஜாக் வேண்டுகோளுக்கிணங்கவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் ஏரளமான வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு மனிதப் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு புதியதாக கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிப்பிற்குள்ளாகியது என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்தி