அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு...

61பார்த்தது
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு...
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் திடீர் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயனாளிகள் குறித்தும், இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் இதய நோய் அறிகுறியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு
வரும் நோயாளிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிக்கும் திட்டம் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்தவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, தலைமை மருத்துவ அதிகாரி(சிவகாசி) மரு. அய்யனார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யசோதாமணி உட்பட மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி