தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கி இருந்தார். அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 17) நடைபெறவுள்ளது. இப்படியான சூழலில் சற்றுமுன்னர் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.