தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 17) கேள்வி நேரம் அலுவல் நடைபெற்று வருகிறது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். இதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை அமைக்க கூடுதலாக ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஈரோடு -கோபிச்செட்டிபாளையம் புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்விக்கு, அமைச்சர் எ.வ. வேலு பதில் கூறியுள்ளார்.