அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே நீக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில் "ஜாமின் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.