சிவகாசி: கண்மாயியை தூர்வாரும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்.....

51பார்த்தது
சிவகாசி அருகே செங்குளம் கண்மாயில் 6ஆயிரம் யூனிட் கழிவுகள் வெளியேற்றம்.
கலெக்டர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சியில் பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் மாவட்ட கலெக்டா், மாநகராட்சி, யூனியன் நிர்வாகம் ஒப்புதலோடு சமூக அமைப்புகளால் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு வந்த தண்ணீர் தற்போதுவரை நிற்கின்றது. இதனால் மாநகராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றது. திருத்தங்கல் செங்குளம் கண்மாய் 37 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் ஒரு காலத்தில் நகரின் நீர் ஆதாரமாக இருந்தது. காற்று அடித்தாலோ லேசான மழை பெய்தாலோ துர்நாற்றத்தை சமாளிக்க முடியாமல் எதிரே உள்ள போலீஸ் ஸ்டேஷன் கதவு, ஜன்னல்களை மாத கணக்கில் பூட்டி வைத்து கொண்டு உள்ளே பணியாற்றும் நிலை இருந்தது. அதனை தொடர்ந்து செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. மண் அள்ளும் கிட்டாச்சி, ஜேசிபி உதவியுடன் டன் கணக்கில் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 50 ஆண்டுகாலமாக கண்மாய் தூர்வாரப்படாத நிலையில் கண்மாயில் கழிவு மண் அகற்றப்பட்டு வருகின்றன.
தற்போது வரை லாரிகள் மூலம் 6ஆயிரம் யூனிட் கழிவுகள் வெளியேற்றப்பட்டன. செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணிகளை கலெக்டா் ஜெயசீலன், அசோகன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.