சிவகாசி: மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்...

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் மீன்களை கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். சிவகாசி அருகே காளையார்குறிச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் காளையார்குறிச்சி, சானார்பட்டி, சொக்கலிங்காபுரம், எம். புதுப்பட்டி மற்றும் சுற்றுபுற கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
காளையார்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி கூறும்போது, கடந்த 10ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எங்கள் ஊர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி ஆண்டு தோறும் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்தி