பிக்பாஸ் சீசன் 8 முதல் நாளே ஆண்களா? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. முதல் 8 போட்டியாளர்களில் 4 ஆண்கள், 4 பெண்கள் உள்ளனர். ஒரே அறையை கேட்கும் இந்த இரு குழுக்களும் விவாதம் செய்து கொண்டு எந்த அறையையும் தேர்ந்தெடுக்க வில்லை. இந்நிலையில், இவர்களை தொடர்ந்து வரும் 2 போட்டியாளர்களும் எந்த அறையையும் தேர்ந்தெடுக்காவிட்டால், 8 பேரும் வெளியே தான் இன்று தூங்க வேண்டும் என்கிற புதிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார் பிக்பாஸ்.