சிவகாசி: சாலையை மறித்து சாமியான பந்தல்

67பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சாலையை மறித்து அமைக்கப்படும் சாமியான பந்தல்கள் காரணமாக போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகின்றது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொழில் நகரமான சிவகாசிக்கு பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒருசில வாரங்களே உள்ள நிலையில், பட்டாசு வாங்குவதற்காக வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

சிவகாசியில் பெரும்பாலான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம். நகரின் நான்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம். மேலும் கார்கள், தள்ளுவண்டிகள் மற்றும் டூவீலர்கள் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

குறிப்பாக திறப்பு விழா நிகழ்சிகள் கூட சாலையை மறித்து பந்தல் போட்டு நடத்துகின்றனர். சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் கார்கள், டூவீலர்கள், ஆம்புலன்ஸ், ஆட்டோ சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் டிராபிக் போலீசார் தினமும் சாலையோர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி