மாநகர திமுக சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

83பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநகர திமுக கட்சி சார்பில், மாநகர செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் தலைமையில், சிவகாசி உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும், திருத்தங்கலிலுள்ள அண்ணா திருஉருவ சிலைக்கு திமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாநகர திமுக சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி