கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை; 3 பேர் கைது

1096பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தாய் மகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த அச்சு தொழிலாளி ஜெயச்சந்திரன் (51_. இவரது மனைவி ஞானபிரகாசி (48). இவர் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க பயன்படும் காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார், இவர்களது மகள் ஷர்மிளா (24). இவர் முதுகலை பட்டம் பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையை ஜெயச்சந்திரன் வீட்டு அருகே வசிக்கும் ஆறுமுகம் (54). ராஜகுமாரி (65). குருவம்மாள் (62) ஆகிய மூவரும் சர்மிளா படிப்பு செலவுக்கு ஞானபிரகாஷிடம் வட்டிக்கு பணம் கொடுத்து இருந்தனர். இதை அடுத்து மூன்று பேரும் ஞானப்பிரகாஷிடம் பணம் வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஞானப்பிரகாசி, சர்மிளா வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து கணவர் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மகள் தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுமுகம், ராஜகுமாரி, குருவம்மாள் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி