சிவகாசி: கல்லூரி மாணவிக்கு நிதி உதவிய முன்னாள் அமைச்சர்....

61பார்த்தது
சிவகாசி அருகே கல்லூரி மாணவிக்கு படிப்புக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கல்லூரி மாணவியி்ன் மேற்படிப்பிற்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி நிதி உதவியை வழங்கினார்.
சிவகாசி அருகே உள்ள லிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் லூர்துராஜ் மகள் லீமாவெரோனிகா. சிலம்ப வீராரான இவர் சிவகாசி தனியார் பெண்கள் கல்லூரியில் படித்துவருகின்றார். இவரின் கல்லூரி மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 25ஆயிரத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். இந்நிகழ்வின் போது திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் வசந்திமான்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி