18 வயதுக்கும் குறைவான, மைனர் பெயரில் தொடங்கப்படுள்ள PPF கணக்குகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்பு கணக்கு விகிதத்தில் வட்டி வழங்கப்படும். அதன் பிறகு PPF-க்கு பொருந்தும் வட்டி விகிதம் பொருந்தும். இரண்டாவது மாற்றம், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட PPF கணக்குகளை வைத்திருந்தால், தற்போது உள்ள வட்டி விகிதம் முதன்மை கணக்கிற்கு மட்டுமே பொருந்தும். இரண்டாம் நிலை கணக்குகள் முதன்மை கணக்குடன் இணைக்கப்படும்.