சிவகாசி: தீயணைப்பு துறை சார்பாக வெள்ளமீட்பு ஒத்திகை பயிற்சி..

68பார்த்தது
சிவகாசி அருகே கிராம மக்களுக்கான மழைநீர் வெள்ள. மீட்பு ஒத்திகை பயிற்சி! - தீயணைப்புத்துறையினர் ஏற்பாடு.
விருதுநகர் மாவட்டம், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வானிலையில் திடீர், திடீரென மாற்றங்கள் ஏற்பட்டு ஆங்காங்கே பலத்த மழை பெய்து நகர் பகுதி மற்றும் கிராமப்புறங்களி லுள்ள கண்மாய்களும், ஊரணி, தெப்பங்களும், மற்றும் குளங்களும் நிரம்பி வழிவதோடு, எதிர்பாராத விதமாக கூடுதலான மழை பொழியும் போது சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் மழைநீர் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாப்பது எவ்வாறு? வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்தும், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது பற்றியும், சிவகாசி தீயணைப்பு துறை சார்பாக சிவகாசி ஒன்றியம் புதுக்கோட்டை கிராம குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் நீச்சல் பயிற்சியுடன், ஒத்திகை நிகழ்ச்சியை நேரடி செயல் விளக்கமாக கிராம மக்களிடையே நடத்திக் காண்பிக்கப்பட்டன. மேலும் வடகிழக்கு பருவ மழையின் சீற்ற தாக்கத்தில் சிக்காமல் தப்பிக்க ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர். இந்நிகழ்வில் கிராம இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி