சிவகாசி: மாற்றுத்திறனாளிக்கு உதவிய முன்னாள் அமைச்சர்

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடமலாபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியாக உள்ளவர் முகம்மது ஷபி. இவரது மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் அடிக்கடி பழுதடைந்து வெளி செல்ல முடியாமல் இருப்பதால் புதிதாக 3 சக்கர வாகனம் வாங்கி தருமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை விடுத்தார்.

உடனே மாற்றுத்திறனாளி ஷபிக்கு புதிய மூன்று சக்கர மோட்டார் வாகனம் வாங்க ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவியை அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு அவரை நேரில் அழைத்து வழங்கினார். உதவி செய்த ராஜேந்திரபாலாஜிக்கு மாற்றுத்திறனாளி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி