சிவகாசி: ஆடி திருவிழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..

58பார்த்தது
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகர் ஆடி பொங்கல் விழா. முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் 1வது வார்டு பகுதியிலுள்ள முத்துமாரி நகரில் வீற்றிருக்கும்
அருள்மிகு ஸ்ரீசப்த கன்னிமார் அம்மன் திருக்கோவிலில்
ஆடி பொங்கல் விழா அதிவிமர்ச்சியாக ஆண்டுதோறும் நடைப்பெறும். அதைப் போல் இந்தாண்டு
ஆடிப்பொங்கல் திருவிழா விடிய, விடிய கொண்டாடப்பட்டன. மேலும் கோவில் நிர்வாகம் சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பாக அதன் தலைவரும், 1வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அ. செல்லம் முன்னாள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டன. பின்னர் நடைப்பெற்ற வாண வேடிக்கை மற்றும் மேளதாளத்தடன் கூடிய முளைப்பாரி ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கோவில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி