தாளிக்கீரை என்பது வேலிகள், சிறு காடுகள் பகுதிகளில் காணப்படும் கொடியின் இனம். உள் உறுப்புகளில் ஏற்படும் புண், சிறுநீர்ப் பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவற்றுக்கு இக்கீரை மருந்தாக செயல்படுகிறது. தாளிக்கீரையின் இலையை அரைத்து தினந்தோறும் தலை முதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கி, தோல் நோய்கள் வராது. குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.