தமிழில் விஜய் நடித்த 'பைரவா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அபர்ணா வினோத். மலையாள நடிகையான இவருக்கும் ரினில் ராஜ் என்பவருக்கும் கடந்த 2023-ல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவரை பிரிவதாக அறிவித்துள்ள அபர்ணா, "தீவிரமான யோசனைக்குப் பிறகு தான் என்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளேன், இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு" என தெரிவித்துள்ளார்.