சிவகாசி பட்டாசு விற்பனையில் அதிகமான தள்ளுபடி விலை- கவர்ச்சிகரமான விளம்பரத்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!!
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் நடப்பு மாத தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக, பட்டாசு கடைகளில் விறுவிறுப்புடன் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிரந்தர பட்டாசு கடை உரிமங்கள் ஆங்காங்கே புதுப்பித்து வழங்கப்பட்டு, வணிகர்கள் தீபாவளி பண்டிகை கால பட்டாசு விற்பனைக்கான ஆயத்த பணிகளை செய்து வரும் நிலையில் இன்னும் சில மாவட்டங்களில் புதுப்பித்து வழங்கப்படாத பட்டாசு கடைகளின் உரிமங்களை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோன்று தற்காலிக பட்டாசு கடைகளின் உரிமங்களையும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பாக விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் முன்வர வேண்டும், உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஆன்லைன் பட்டாசு வணிகத்தை தடை செய்துள்ளது. பட்டாசு விற்பனையில் 90% என கூடுதலான தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக விளம்பரப்படுத்தி, தரமற்ற பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதால், பொது மக்களிடையே ஒரு அவமதிப்பை உருவாக்கியுள்ளது. தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகளை பாதுகாப்பாக உபயோகித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.