வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், "தனியார் குடியிருப்பு கட்டிடங்களில் வாக்குச்சாவடிகள் இருக்கக் கூடாது. ஒரு வாக்காளர் வாக்களிக்க 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யாத வகையில் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். 200 மீ சுற்றளவுக்குள் அரசியல் கட்சியின் அலுவலகம் இல்லாத வகையில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.