போஸ்ட் ஆபீஸின் ‘கிராம சுரக்ஷா யோஜனா’ திட்டத்தில் 19 முதல் 55 வயது உடையவர்கள் சேர்ந்து பயனடையலாம். மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு வாரியாக விருப்பப்படி இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000-க்கு ரூ.65 போனஸ் ஆக வழங்கப்படும். ஒருவர் 19 வயதில் ரூ.10 லட்சத்திற்கு இந்த திட்டத்தில் சேர்ந்தால் 55 ஆண்டுகளுக்கு பிரீமியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 செலுத்த வேண்டும். முதிர்வு தொகையாக ரூ.31 லட்சம் கிடைக்கும்.