கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உள்ள சாலையில் நேற்று(அக்.24) மதியம் போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை, போலீஸ்காரர் ஒருவர் நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் காரை ஓட்டிவந்த நபர் அந்த போலீஸ்காரர் மீது மோதியுள்ளார். இதனால் அந்த போலீஸ்காரர் காரின் முன் பகுதியை பிடித்து தொங்கியவாறு 100 மீட்டர் வரை சென்றுள்ளார். பின்னர் அதிலிருந்து குறித்து உயிர் தப்பினார். பின்னர் காரை ஓட்டிய மிதுன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.